நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் படம் ரஜினிகாந்தின் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார். சிலை கடத்தல்கார்களிடம் இருந்து தனது மகனை மீட்கும் ரஜினி, பின்னர் மகனையே கொலை செய்வதோடு கதை முடிந்தது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க நெல்சன் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சந்திரமுகி, குசேலன், சிவாஜி, தர்பார், அண்ணாத்த என ஐந்து முறை ரஜினியுடன் நடித்துள்ள நயன்தாரா, ஆறாவது முறையாக மீண்டும் இப்படத்தில் இணையப்போகிறார்.


ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில், சிலை கடத்தல்கார்களுக்கும் ரஜினிக்கும் இடையே மோதும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 2024 இறுதியில் அல்லது 2025 ஆரம்பத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும், ஜெயிலர்-2 படத்தில் நடிக்க தொடங்கவுள்ளார்.


