Wednesday, October 28, 2026

சண்முக பாண்டியனை சினிமாவில் வெற்றிபெற வைக்க நடிகர் விஜய் உதவ வேண்டும்: நடிகை அம்பிகா கோரிக்கை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கடந்த டிசம்பர் மாத இறுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் பெரிய நடிகர் ஆவதற்கு நடிகர் விஜய் உதவ வேண்டும் என நடிகை அம்பிகா கோரிக்கை வைத்துள்ளார்.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க துடிக்கும் நிலையில், அவரது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை அம்பிகா விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “விஜய்க்கு எப்படி விஜயகாந்த் செந்தூரபாண்டியா வந்து உதவி செஞ்சாரோ அதே போல சண்முக பாண்டியனுக்கு விஜய் செந்தூரப்பாண்டியா வந்து உதவி செய்யணும்.

ADVERTISEMENT

விஜய் சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்தால் அதை பார்த்து விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் முதல் ஆளாக சந்தோஷப்படுவார். மறைந்த நம்முடைய கேப்டன் விஜயகாந்த் ஆன்மாவும் மகிழ்ச்சியடையும்” என்று கூறினார்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜய்யின் திரைப்பயணத்தில் விஜயகாந்த் பெரும் பங்கு வகித்தார். இத்தகைய சூழ்நிலையில், விஜய் சண்முக பாண்டியன் படத்தில் நடித்தால், அது விஜயகாந்துக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் என்பது உறுதி.

இந்த கோரிக்கையை விஜய் நிறைவேற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT