தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் “கோட்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில், விஜயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான “ஆர்ஆர்ஆர்” படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான், விஜயின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இயக்குனர் தேர்வு இன்னும் முடிக்கப்படவில்லை.
டிவிவி எண்டர்டெயின்மென்ட் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனம் மிக பிரமாண்ட படங்களையே இயக்கி வருகிறது. அதனால் விஜய்யின் படமும் பெரிய பிரமாண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் 68வது படமான “கோட்” படம் வரும் மார்ச் மாதத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் 69வது படம் எப்போது துவங்கும் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் 69வது படம் டிவிவி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் என்ற தகவல் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
