பெண் குழந்தைகள் சீக்கிரம் வளர்ந்து விடுவதாக பலரும் கூறுவதுண்டு. அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற பலர், அடுத்த சில ஆண்டுகளில் இளம் நாயகிகளாக படங்களில் அறிமுகமாகி விடுகின்றனர்.

அந்த வகையில், அஜித்குமார், தமன்னா நடித்த வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவீனா பார்வதி. இதில் நாசரின் பேத்தியாக நடித்திருந்தார். ஒரு காட்சியில் இந்த குழந்தையிடம் விளையாடுவதாக சொல்லிவிட்டு, தன்னை கொல்ல வரும் எதிரிகளை பந்தாடுவார் அஜித்.


வீரம் படத்தைத் தொடர்ந்து, மஞ்சப்பை, அரண்மனை கத்தி, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் யுவீனா பார்வதி. மாசு என்கிற மாசிலாமணி படத்தில், சூர்யாவுக்கு மகளாகவும் நடித்துள்ளார்.


அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக காணப்பட்ட யுவீனா பார்வதி, சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன.


இந்த புகைப்படங்களில், வளர்ந்த பெண்ணாக மிக அழகாக காட்சியளிக்கிறார் யுவீனா பார்வதி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வீரம் படத்தில் குட்டிப்பெண்ணாக நடித்த பொண்ணா இது? ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்களே, என்று ஆச்சரியப்படுகின்றனர்.


யுவீனா பார்வதி தற்போது 18 வயதாக உள்ளார். இவர், பிளஸ் 2 படிப்பை முடித்துள்ளார். இவரது நடிப்பு திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைத்தால், இவரும் ஒரு நல்ல நடிகையாக வலம் வருவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
