இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் தெறி ரீமேக் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ள இந்தப் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ், சினி 1 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன. படத்தை அவரது உதவி இயக்குநர் காலீஸ்வரன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் பூஜையில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, அட்லீ, அவரது மனைவி பிரியா, தயாரிப்பாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்று அட்லீ தெரிவித்துள்ளார்.
அட்லீயின் அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தையும் சேர்த்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்தின்மூலம் 4 படங்களை அட்லீ தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் 2 படங்கள் மற்றும் தெலுங்கில் ஒரு படம் என அட்லீ அடுத்தடுத்த படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படங்களில் இயக்குநர், நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
