அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். ஏகே 63 என்ற டைட்டில் உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் முதன் முறையாக தனது ட்ரீம் ப்ராஜெக்ட் படத்தை இயக்கவுள்ளார். அஜித்தின் ஏகே 63 80களின் பின்னணியில் நடக்கும் கிராமத்து படமாக உருவாகவுள்ளதாம். மேலும், இதில் தபு அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.


இந்நிலையில் ஏகே 63-ல் வில்லன் கேரக்டரில் யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் லீடிங் கேரக்டரில் நடித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா.


அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 63 படத்திலும் வில்லனாக மிரட்டவுள்ளதாக தெரிகிறது. அதேநேரம் அரவிந்த் சாமியிடமும் வில்லன் ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இன்னொரு பக்கம் தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவருடனும் வில்லன் ரோலுக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்தப் படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் சூப்பரான அடையாளம் கொடுத்தது. இந்நிலையில் முதன்முறையாக அஜித்துக்கு எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


எஸ்.ஜே.சூர்யா அஜித் கூட்டணிக்கு ஏன் அதிக எதிர்பார்ப்பு?


அஜித் – எஸ்.ஜே.சூர்யா இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள்.
அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, அஜித் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தார்.
இருவரும் ஏற்கனவே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த காரணங்களால், அஜித் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
