Wednesday, October 28, 2026

பவதாரிணி இறப்பிற்கு முக்கிய காரணமே இது தான் ! பயில்வான் கூறிய அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோய் காரணமாக இலங்கையில் காலமானார்.

பவதாரணிக்கு கடந்த ஓராண்டுக்கு முன் பித்தப்பையில் கல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்த போது அது, புற்றுநோயாக மாறி, சிறுநீரகத்திற்கும் பரவிவிட்டது. இதற்காக பல சிகிச்சைகள் செய்த போதும் அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அனைத்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், கடைசியாகத்தான் இலங்கையில் புற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு, சிகிச்சை எடுக்க சென்றார். ஆனால், அது பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

ADVERTISEMENT

பவதாரணி இளையராஜாவின் மூத்த மகள் ஆவார். இளையராஜாவின் இசையில் ‘ராசய்யா’ படத்தில் ‘மஸ்தானா மஸ்தானா’ பாடலுடன் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் பாடியுள்ளார். ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.காதல் திருமணம்: பவதாரணி எஸ்.என். ராமச்சந்திரன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் இல்லற வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையாததால், பவதாரணி கணவரை விட்டு பிரிந்து, தந்தை இளையராஜாவுடனே வசிந்து வந்தார். இவரின் மனைவி என்பதைவிட இளையராஜாவின் மகள் என்பதில் பவதாரணி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். 47 வயதான பவதாரணியின் ஒரே வருத்தம் குழந்தை இல்லை என்பது மட்டும் தான்

பவதாரணி ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், ஒரு சில திரைப்படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

பவதாரணியின் இறப்புக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து இரவு10 மணிக்குப் பின் பவதாரணியின் உடல் சாலை மார்க்கமாக இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (27-01-2024) காலை 10 மணிக்கு பவதாரணியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT