Wednesday, October 28, 2026

அஜித்துக்கு வில்லனாக மூன்று ஹீரோக்கள் !உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அடுத்த படம் காமெடி ஜானரில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி படத்தை முடித்துவிட்டு அஜித் உடனே அடுத்த படத்தில் இணைகிறார். அப்படத்தை மார்க் ஆண்டனி என்னும் ஹிட் படத்தினை கொடுத்த ஆதிக் ரவிசந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது.

ADVERTISEMENT

ரொம்ப நாளுக்கு பின்னர் அஜித்தின் கேரியரில் மீண்டும் ஒரு காமெடி ஜானரிலே இந்த படம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தினை 3 மாதங்களுக்குள் முடித்து விடுவேன் என்றும் ஆதிக் ரவிசந்திரன் நம்பிக்கை கொடுத்து இருக்கிறாராம். இதனாலே அஜித் உடனே இந்த படத்தில் இணைய இருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக தபு தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக விவரமறிந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கிட்டத்தட்ட நடிப்பில் புது அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பு அரக்கனாகவே இருந்து இருந்தார். அவருக்கு அதற்காக அதே பெயரை படக்குழு டைட்டில்லாகவும் கொடுத்தது.

சூர்யாவின் வாழ்க்கையை தொடங்கி வைத்தவரும் அஜித் தான் என்பதால் கண்டிப்பாக இந்த படத்தினை ஒப்புக்கொள்வார் என்ற பேச்சே எழுந்துள்ளது. மேலும், கோலிவுட்டில் தற்போது இருக்கும் தரமான வில்லன் மெட்டிரியல் அவர்தான் என்பதால் நடிப்பு அரக்கனை புக் செய்யவே படக்குழுவும் தயாராக வருகிறது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் அடுத்த படம் காமெடி ஜானரில் உருவாகும் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் காமெடி படங்கள் எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, வில்லன் படம், திருப்பாச்சி, சிட்டிசன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படுகின்றன.

இந்நிலையில், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் காமெடி படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆதிக் ரவிசந்திரனின் மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அஜித்தின் காமெடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

எனவே, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT