தமிழ் சினிமாவில் ‘தல’ என்ற பட்டத்துடன் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியான ‘பில்லா’ திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் அஜித்தின் நடிப்பு மற்றும் ஸ்டைல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அஜித் நடித்த ‘பில்லா’ படத்தில் ரஜினிகாந்த் இடம்பெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் தற்போது தல ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பில்லா’ திரைப்படம் ரீமேக்காகவே அஜித் நடித்த ‘பில்லா’ திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட பூஜையில், தல அஜித்தின் அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.
இந்தப் புகைப்படங்களில், அஜித் – ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளன.
தல ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர். ‘ஓல்ட் பில்லாவும் நியூ பில்லாவும் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, தல ரசிகர்களை தாறுமாறாக சந்தோஷப்படுத்தி உள்ளது’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

