Wednesday, October 28, 2026

லியோ பட இயக்குனரை கழுவி ஊத்திய எஸ்.ஏ. சந்திரசேகர் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஏ. சந்திரசேகர், சமீபத்தில் நடைபெற்ற தேசிங்கு ராஜா 2 படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் லோகேஷ் கனகராஜை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

லியோ படத்தை கழுவி ஊத்திட்டாரு

ADVERTISEMENT

“முன்பெல்லாம் இயக்குநர்கள் நல்ல கதை மற்றும் எந்த ஹீரோ நடித்தாலும் ஓடக் கூடிய திரைக்கதைகளை உருவாக்கி விட்டு படம் எடுப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஹீரோ கிடைத்து விட்டால் போதும் என குப்பை கதைகளை படங்களாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு இயக்குநருக்கு போன் போட்டு பேசினேன். படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்து விட்டு படத்தின் முதல் பாதி தரமாக உள்ளது. ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு இதுதான் உதாரணம் என்றேன். அவர் மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர், இரண்டாம் பாதி சரியில்லை என்றும் அந்த மதத்தில் அப்படியொரு மூட நம்பிக்கை இல்லை என பேசத் தொடங்கினேன். சார் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பிறகு போன் பண்றேன் என வச்சுட்டாரு.. அதன் பின்னர் போன் பண்ணவில்லை. படம் வெளியாவதற்கு 5 நாள் முன்னாடியே சொல்லிட்டேன். படம் ரிலீஸ் ஆன பின்னர் அனைவரும் விமர்சனங்களில் அதையே சொல்லி கழுவி ஊத்திட்டாங்க” என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை மறைமுகமாக தாக்குவதாக கருதப்படுகிறது. லியோ படத்தில் இரண்டாம் பாதியில் வரும் ஒரு காட்சியில், இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கை ஒன்று காட்டப்படுகிறது. இந்த காட்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

ஹீரோவே தலையை வெட்டலாமா?

லியோ படத்தை மட்டுமின்றி, விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, சூர்யா என ஹீரோக்களையே வைத்து தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் எடுக்கலாமா? என்றும் மாஸ்டர் படத்தில் ஹீரோவை குடிகாரனாக காட்டியது குறித்தும் எஸ்.ஏ. சந்திரசேகர் மறைமுகமாக தாக்கி விமர்சித்துள்ளார்.

“3 நிமிஷமாவது”

“3 மணி நேரம் படத்தில் 3 நிமிஷமாவது நல்ல கருத்துக்களை சொல்லுங்கள். கதை மற்றும் திரைக்கதையே இல்லாமல் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம்” என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT