தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி பாலன். இவர் அருவி, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், நடிகை அதிதி பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது உறவுகளில் அதிக எதிர்பார்ப்புகள் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நான் இதுவரை நிறைய உறவுகளில் இருந்திருக்கிறேன். என்னுடைய வீட்டில் இதனை பற்றி தெரியும். எனவே வெளியே சொல்ல எனக்கு எந்த கூச்சமும் இல்லை.
என்னைப்பொறுத்தவரை ஒரு உறவு பிரிகிறது என்றால் இது பெரும்பாலும் அதிக எதிர்பார்ப்புகள் தான். அதாவது இரண்டு பேருமே பெரிய அளவில் தங்களுடைய எதிர்பார்ப்புகளை வளர்ப்பது தான். எனக்கும் நான் உறவில் இருந்தவர்களுக்கும் இடையே இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் எதிர்பார்ப்புகள் என்பது யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை நான் சரியாக தான் இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே என்னை பலரும் Attitude என்று கூறுவார்கள். ஆனால், நான் அப்படிப்பட்ட ஒரு பெண் கிடையாது” என்று தெரிவித்தார்.
நடிகை அதிதி பாலன் கூறியது உண்மைதான். ஒரு உறவில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல், அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டால், அது பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
