Wednesday, October 28, 2026

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகை வனிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அனல் காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என வரிசையாக பல படங்கள் வெளி வர உள்ளது.

இந்நிலையில், அண்மையில் வனிதா அளித்த பேட்டியில் தனது மூன்றாவது திருமணம் பற்றி பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

பேட்டியின் போது வனிதாவிடம், “திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வனிதா, “நான் சட்டப்படி இரண்டு திருமணம் தான் செய்துள்ளேன். மூன்றாவது திருமணம் கண்டிப்பா பண்ணுவேன்” என்று நக்கலாக கூறினார்.

மேலும், “மாப்பிள்ளையின் நிறம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டதற்கு, “மாப்பிள்ளை குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டும்” என்று சிரிக்காமல் நக்கலாக பதிலளித்தார்.

இந்த பதிலில் வனிதா தனது திருமணம் குறித்த எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அனைத்து பேட்டிகளிலும் தனிடம் திருமணம் பற்றி மட்டுமே கேள்வி கேட்கிறார்கள் என்று காட்டமாகவும் பேசியுள்ளார்.

வனிதாவின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். “தனது விருப்பத்தை தைரியமாக வெளிப்படுத்தும் வனிதாவை பாராட்டுகிறோம்” என்று பலரும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT