Wednesday, October 28, 2026

ஒட்டுமொத்த திரையுலகமே காத்திருந்த விடாமுயற்சி ⏳ ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் எப்போ தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததை அடுத்து, அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கவுள்ளது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கான ஃபோட்டோஷூட்டும் சமீபத்தில்தான் முடிந்துள்ளது.

மேலும், இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு டூயட் பாடல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் கதையின் ஒன்லைன் இதுதான் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதன்படி, அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் அது.

படத்தின் ஓடிடியை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT