Wednesday, October 28, 2026

சிம்பு 48-வது படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனரான தேசிங் பெரியசாமி பல பேட்டிகளிலும் கூறியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவும் நீளமான தலைமுடியுடன் இருக்கிறார்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தலைப்புடன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு ரசிகர்கள் இந்த போஸ்டரை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT