Wednesday, October 28, 2026

தளபதி விஜய்யின் கோட் படத்தை வாங்க மறுத்த நிறுவனம் !பரிதாப நிலையில் தளபதி விஜய்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் 67வது படமான “கோட்” திரைப்படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “கோட்” படத்தில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனக்ஷி சவுத்ரி, பிரஷாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அடுத்ததாக “கோட்” படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் படம் என்றால், அப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடனே சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை உள்ளிட்ட மற்ற அனைத்து உரிமைகளும் விற்பனை ஆகிவிடும்.

ஆனால், தற்போது “கோட்” படத்தின் ஓடிடி உரிமை விற்பனைக்காக படக்குழு ட்ரையல் ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு “கோட்” படத்தின் ஓடிடி உரிமையை விற்க முயன்ற படக்குழு, மிகப்பெரிய தொகையை கேட்டுள்ளது. இதனால் ஷாக்கான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தலைதெறிக்க ஓடிவிட்டது.

இதனால், “கோட்” படத்தை அமேசான் நிறுவனத்திற்கு விற்க முயற்சிகளை படக்குழு எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், “கோட்” படத்தின் ஓடிடி உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்ற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT