தனுஷின் 51வது படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், தனுஷின் பிச்சைக்காரன் கெட்டப் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பதி அல்பிரி பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இந்த போட்டோவில், தனுஷ் தலைமுடி கலைந்து, தாடி, அழுக்கு உடையுடன் நடுரோட்டில் நிற்கிறார். இந்த கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தனுஷ் தனது நடிப்பால் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து காட்டுவதில் வல்லவர். இந்நிலையில், பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் தனுஷ் எப்படி நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் தொடங்கிய நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படக்குழுவினர் அடுத்த படப்பிடிப்பை எங்கு நடத்துவார்கள் என்று முடிவு செய்யாமல் உள்ளனர்.
