Wednesday, October 28, 2026

தல சேஞ்ச் ஓவர்💥!!இனி சால்ட் அண்ட் பேப்பர் லூக்குக்கு Bye Bye சொன்ன அஜித் 😎 !! வைரலாகும் தகவல் இதோ !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்து, தற்போது துபாயில் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தற்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்தப் படத்துக்காக அஜித்துக்கு 175 முதல் 185 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 100 முதல் 125 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருகிறார் அஜித். ஆனால், ஏகே தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பான் இந்தியா படமாக உருவாகும் எனத் தெரிகிறது. இதனால் அஜித்தின் சம்பளத்திலும் தாராளம் காட்டியுள்ளது தயாரிப்பு தரப்பு.

முக்கியமாக ஏகே 63 படத்தை இன்னொரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடித்துக் கொடுக்க முடிவு செய்திருந்தாராம் அஜித். ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளார் அஜித். விஸ்வாசம் படத்தின் ரிலீஸுக்கு முன்பிருந்தே அஜித்திடம் கால்ஷீட் கேட்டு வருகிறதாம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். அது இப்போது தான் கை கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை மற்றும் மற்ற நடிகர்களின் தேர்வு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் ஏகே 63 படத்துக்கான சம்பள உயர்வு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 100 முதல் 125 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அஜித், தற்போது 175 முதல் 185 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் வாங்காத அளவிற்கு அதிக சம்பளமாகும்.

இந்த சம்பள உயர்வு அஜித்தின் புகழ் மற்றும் மதிப்பு எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது. அஜித்தின் படங்கள் எப்போதும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அஜித்துக்கு அதிக சம்பளம் வழங்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

அஜித்தின் ஏகே 63 படம் பான் இந்தியா படமாக உருவாகும் என்பதால், இந்தப் படத்தின் மூலம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்திய அளவில் உள்ள ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதே போல், பல ஆண்டுகளாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த தல தற்போது இந்த படத்திற்க்காக தலை முழுவதும் கலரிங் செய்துவிட்டு இளமையாக தலை தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் தல ரசிகர்களுக்கு வரும் தீபாவளி தல தீபாவளிதான்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT