Wednesday, October 28, 2026

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா? என்ன படம் தெரியுமா.?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் முடிவடைந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத் குமார் நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் முற்றிலும் நரைத்த தோற்றத்துடன் காணப்பட்டார்.

விடாமுயற்சியில் இருந்து இன்னும் சுவாரஸ்யமான புதுப்பிப்புகளில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று விகடனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அதே கட்டுரையில், ஃபர்ஸ்ட் லுக்கிற்கான போட்டோஷூட் முடிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். உலகெங்கிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அவர் நடித்த அசல் படத்திற்கு பிறகு ரசிகர்களை சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது என எதிலும் நாட்டம் கொள்ளாமல் இருக்கிறார் அஜித்.

இருந்தாலும் அஜித்தை பின் தொடர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் , த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் விடாமுயற்சி.இந்தப் படத்தில் ஆரவ் மற்றும் அர்ஜூன் போன்ற முக்கிய நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து கொண்டிருக்க தற்போது அங்கு நிலவும் கால நிலை காரணமாக படப்பிடிப்பை வேறொரு இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

படத்தின் தலைப்பை தவிற வேறெந்த அப்டேட்டும் வராத நிலையில் ஆங்காங்கே இருக்கும் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என செய்திகளில் கூறப்படுகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே படப்பிடிப்பை பிப்ரவரியில் முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இடையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக ஒருவேளை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

திரையுலகை பொருத்தவரை எதாவது ஒரு திரைப்படம் வெற்றியடைந்துவிட்டால், அப்படத்தின் 2வது பாகம் அல்லது பிற மொழிகளில் ரீமேக் செய்வது என்பது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் மாஸ் மூலம் இவரது மார்க்கெட் உயர்ந்தது என்றே கூறலாம். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான 2வது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதில் இன்னும் ஒரு அசத்தலான தகவல் என்னவென்றால், இந்த 2வது பாகத்தில், பிரபல நடிகரான அஜித்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இத்திரைப்படத்தை, அஜித்தை வைத்து ஹிட் படங்களை கொடுத்த விஸ்ணு வரதன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் – விஸ்ணு வரதன் கூட்டணி இணைந்தால் அந்த படத்திற்கு கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். இந்த கூட்டணி உறுதியானால் அஜித்தின் 63வது படத்திற்கு பிறகு, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள்.
விடாமுயற்சிக்குப் பிறகு, அஜீத் மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே63 என்று தற்காலிகமாகத் தலைப்பிடுகிறார். இப்படத்தில் தபு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கலாம் என்று யூகங்கள் வந்துள்ளன, ஆனால் படம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT