Wednesday, October 28, 2026

காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரட்டிப்பு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

காதலை வெளிப்படுத்தி, அன்பைப் பகிரும் நாளாக ‘காதலர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை, ஒரு வாரம் காதலர் தின வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
ரோஸ் டே, ப்ரொப்போஸ் டே, சாக்லேட் டே, டெட்டி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, வாலென்டைன்ஸ் டே என 7 நாட்களுக்கு 7 விதவிதமான தினங்களை காதலர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ரோஜா பூக்களுக்கு அதிக வரவேற்பு:

காதலன்/காதலியிடம் ரோஜா பூ, மோதிரம், க்ரீட்டிங் கார்டுகளை கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வழக்கம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
இதனால் ரோஜா பூக்களின் விற்பனை பிப்ரவரி மாத தொடக்கத்தில் படுஜோராக நடைபெறும்.
அதேபோல் அதன் விலையும் உயர்ந்து காணப்படும்.
பூக்களின் விலை:

இந்தாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
சென்னையில், சிவப்பு ரோஜா ஒன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
15 ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.300 முதல் 350 வரை விற்பனையாகிறது.
ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500, சம்பங்கி ரூ.200, பன்னீர் ரோஜா ரூ.200, அரளி ரூ.100, கனகாம்பரம் ரூ.900, சாமந்தி ரூ.70, சாதி மல்லி ரூ.800, சாக்லேட் ரோஸ் ரூ.170 என விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT