சென்னை: ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகள் எத்தனை முறை ரசித்தாலும் சலிப்படையாதவை. நாடகம், சினிமா என எந்த வடிவில் வந்தாலும் ரசிகர்கள் அதை விரும்பி பார்த்துக் கொண்டாடுகிறார்கள்.
சமீபத்திய ராமாயண படங்கள்
‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ போன்ற கதைகள் சின்னத்திரையிலும், திரையிலும் பல முறை வந்துள்ளன. சமீபகாலத்தில் ‘ஆதிபுருஷ்’, ‘பிரம்மாஸ்திரா’, ‘ஹனுமன்’ என ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வெளியானது.
கதையாக்கத்தில் சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடித்தன.
லிங்குசாமி இயக்கத்தில் மகாபாரதம்
இந்த வரிசையில் தற்போது மகாபாரதக் கதையும் மீண்டும் படமாகிறது.
‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி 2’, ‘தி வாரியர்’ போன்ற படங்களை இயக்கிய லிங்குசாமி, மகாபாரதத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிங்குசாமியின் கம்பேக்
‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி 2’, ‘தி வாரியர்’ போன்ற படங்கள் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், லிங்குசாமி மகாபாரத கதையின் மூலம் மீண்டும் வலுவான கம்பேக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்
இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பையா 2
இதற்கிடையே, ஆகாஷ் முரளியுடன் ‘பையா 2’ கதையையும் உருவாக்கும் விவாதத்தில் லிங்குசாமி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
