Wednesday, October 28, 2026

ப்பா.. இது நம்ம​ லிஸ்ட்லயே இல்லயே சைலண்டாக வெற்றி இயக்குனருக்கு ஓகே சொன்னாரா அஜித் !எதிர் பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் முடிவடைந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத் குமார் நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் முற்றிலும் நரைத்த தோற்றத்துடன் காணப்பட்டார்.

விடாமுயற்சியில் இருந்து இன்னும் சுவாரஸ்யமான புதுப்பிப்புகளில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று விகடனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அதே கட்டுரையில், ஃபர்ஸ்ட் லுக்கிற்கான போட்டோஷூட் முடிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக மாறி ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என அடித்து ஆடியவர். இதுவரை எடுத்தது 7 படங்கள்தான் என்றாலும் ஒவ்வொன்றும் தரமான படங்கள். சிறந்த இயக்கத்திற்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

எனவே, மணிரத்னம் போன்ற இயக்குனர்களே அவருக்கு ரசிகராக மாறினார்கள். இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் நடிக்க விஜய் போன்ற நடிகர்களே ஆசைப்படுகின்றனர். விஜய்க்கு கூட அவர் கதை சொல்லி ஓகே செய்துள்ளார். ஆனால், நேரம் இன்னும் கூடிவரவில்லை.

ஆனால், அஜித்துடன் விரைவில் வெற்றிமாறன் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இவர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும், விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. இப்போது அவர் விடுதலை 2 படத்தை தயாரித்து வருகிறார்.

விடுதலை 2 படம் முடிய இன்னும் சில மாதங்கங்கள் ஆகும் என்பதால் அஜித் படம் அவரின் கையில் இருந்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் கைக்குக் சென்றுவிட்டது. இந்த படத்தை பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை. தயாரிப்பாளர் மாறினாலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் என அஜித் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், விடுதலை 2 தயாரிப்பளர் எல்ட்ரெட் குமாரிடம் ‘கண்டிப்பாக உங்களின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து கொடுக்கிறேன்’ என அஜித் சொல்லி இருக்கிறார். தற்போது வெற்றிமாறன் அவரின் கையில் இருப்பதால் அஜித் – வெற்றிமாறன் காம்பினேஷனை சேர்க்க எல்ட்ரெட் குமார் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டதாகவும், அதற்கான வேலையும் துவங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே, தெலுங்கு இயக்குனர் படத்தில் நடித்தபின் வெற்றிமாறன் படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் – அஜித் கூட்டணி என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் கூட்டணி. ஏற்கனவே சூர்யா, விஜய் போன்றோர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க நினைத்தாலும் அஜித்துக்கு சுலபமாக அது அமைந்துவிட்டது.

ஆனால், இந்த பிராஜெக்ட் டேக் ஆப் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விடாமுயற்சி அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் படம். இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.விடாமுயற்சிக்குப் பிறகு, அஜீத் மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே63 என்று தற்காலிகமாகத் தலைப்பிடுகிறார். இப்படத்தில் தபு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கலாம் என்று யூகங்கள் வந்துள்ளன, ஆனால் படம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT