செரிமானத்திற்கு உகந்த ரசம்!
கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
சீரகம் – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 2 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 10
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கடுகு – 1/2 தேக்கரண்டி
வர மிளகாய் – 2
புளி – எலுமிச்சம் பழ அளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சம் பழ அளவில் புளி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி, தோல் நீக்கிய பூண்டு, சீரகம், சின்ன வெங்காயம், மிளகு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
ஊறவைத்த புளி கரைசலை ஊற்றவும். மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு ரசத்தில் பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விடவும்.
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
புளி கரைசல் அதிக புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சேர்த்தால் ரசத்திற்கு நல்ல சுவை கிடைக்கும்.
பெருங்காயத் தூள் சேர்த்தால் ரசத்திற்கு நல்ல மணம் கிடைக்கும்.
கொத்தமல்லி தழை சேர்த்தால் ரசத்திற்கு நல்ல ருசி கிடைக்கும்.
