Wednesday, October 28, 2026

நான் கடவுள் விவகாரத்தில் பில்லா ஸ்டைலில் பாலாவிற்கு தரமான சம்பவம் செய்த அஜித்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்குமார் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் அஜர்பைஜானில் தொடங்கினார். ஒரு அட்டவணை முடிந்து சமீபத்தில் சென்னை திரும்பினார். இப்போது, டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் அடுத்த ஷெட்யூலுக்காக ஏகே மற்றும் படக் குழு மீண்டும் அஜர்பைஜானுக்குச் செல்வதாகக் கேள்விப்படுகிறோம்.

தமிழ் சினிமா தவிர்க்க முடியாத இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இதுவரை 8 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அதில், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். தமிழ் சினிமா கண்ட இயக்குநர்களில் தனி ரகமான பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில், முதலில் நடிக்க இருந்தது அஜித் தான் என்றும், பின் அவரை பாலா நீக்கிவிட்டதாகவும், இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

2009ஆம் ஆண்டு பாலா இயக்க்ததில் வெளியான திரைப்படம் நான் கடவுள். இப்படத்தில் ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை அடிப்படையாக் கொண்டு நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தான் என்ற பாடலை பார்த்து கண்கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு ஒரு உணர்வு பூர்வமான இசையை இசைஞானி கொடுத்து இருப்பார்.நான் கடவுள்: சாதாரண கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வந்த ஆர்யா, நான் கடவுள் படத்திற்காக பல முயற்சிகளை செய்து அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு ஆர்யாவின் புகழ் உச்சிக்கு சென்றது. இந்த புகழ் அனைத்தும் அஜித்திற்கு வர வேண்டியதாம். நான் கடவுள் படத்தில், முதலில் அஜித்குமார் நடிப்பதாக இருந்தது. இதற்காக அவர் முடியை வளர்ந்து தயாரிக் கொண்டிருந்தாராம். ஆனால், அப்போது, பாலாவிற்கும் அஜித்திற்கும் இடையே சண்டை வந்ததை அடுத்து, பாலா அஜித்தை அடித்துவிட்டதாகவும், இதனையடுத்து அந்த கூட்டணி முறிந்து விட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன.பத்திரிக்கையாளர் விளக்கம்: இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், பாலாவிற்கும் அஜித்திற்கு பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அஜித்தை பாலா நீக்கிவிட்டார். இதற்காக அஜித்திற்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேச்சு வார்த்தை சென்னை பாம்க்ரோ ஓட்டலில் நடந்தது. அப்போது, அன்புச்செழியன் அவர்களும், பி எல் தேனப்பன் அவர்களும் உடன் இருந்தனர். அப்போது, முன் பணமாக கொடுத்த ரு கோடியை வட்டியுடன் தரும்படி அன்புச்செழியன் கேட்டார். அப்போது, அஜித் படம் தாமதமானதத்திற்கு காரணம் நான் இல்லை, பாலா தான் என்று வாக்கு வாதம் செய்தார் அஜித்.

அஜித் செய்த தரமான சம்பவம்: கடைசியில் அஜித்திற்கு அவர்கள் நெருக்கடி கொடுத்ததால், பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அஜித் தள்ளப்பட்டார். இதையடுத்து, உங்களுக்கு என்ன வட்டி தானே அதையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று 1 கோடி ரூபாய் முன் பணத்தையும் வட்டியுடன் சேர்த்து கொடுத்தார். அதாவது, பில்லா ஸ்டைலில் கொடுத்தார். அதைப்பார்த்து இங்கிருந்த அனைவரும் பின்வாங்கினார்கள் என்று பத்திரிக்கையாளர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், த்ரிஷா, சஞ்சய் தத், அருண் விஜய், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT