Wednesday, October 28, 2026

விபத்தில் இருந்து உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த சனிக்கிழமை, ஏர் விஸ்தாரா விமானத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்தார்.

அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸும் விமானத்தில் பயணித்தார். விமானம் புறப்பட்டு சுமார் அரை மணி நேரம் கழித்ததும், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனால் விமானம் கடுமையாக குலுங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், பயத்தில் உறைந்தனர்.

உடனடியாக விமானி, விமானத்தை மும்பைக்கு திருப்பி, பத்திரமாக தரையிறக்கினார்.

இந்த அதிர்ச்சி அனுபவம் குறித்து, ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் மற்றும் ஷ்ரத்தா தாஸ் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புற இருக்கையை அழுத்தமாக மிதித்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி, “இப்படித்தான் உயிர் பிழைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம், விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT