Wednesday, October 28, 2026

‘புஷ்பா’ 3ம் பாகம் உறுதி! – அல்லு அர்ஜுன் அதிரடி அறிவிப்பு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

2021ல் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தின் 2ம் பாகம் ‘புஷ்பா: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

ADVERTISEMENT

சுகுமார் இயக்கத்தில் மீண்டும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா: தி ரைஸ்’ திரையிடப்படுகிறது.

இதற்காக அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் பெர்லின் சென்றுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், ‘ரசிகர்கள் கண்டிப்பாக ‘புஷ்பா’ படத்தின் 3வது பாகத்தை எதிர்பார்க்கலாம்.

அதன் அடுத்தடுத்த சீக்வல்களை உருவாக்க நானும், சுகுமாரும் விரும்புகிறோம்.

மேலும், அதற்கான அற்புதமான ஐடியாக்கள் எங்களிடம் இருக்கின்றன.

‘புஷ்பா’ 2வது பாகம், முதல் பாகத்தை விட மிக வித்தியாசமாகவும், புதிய அனுபவமாகவும் இருக்கும்.

காரணம், உள்ளூரில் இருந்த கதைக்களம் தற்போது இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விரிவடைந்துள்ளது.

‘புஷ்பா’ முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கேரக்டரில் நடித்த பஹத் பாசில், 2வது பாகத்தில் புஷ்பாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்.

மேலும், இருவருக்குமான மோதல் மிகப்பெரிய அளவில் இருக்கும்’ என்றார்.

அல்லு அர்ஜுனின் இந்த அறிவிப்பு ‘புஷ்பா’ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT