Wednesday, October 28, 2026

பிரித்விராஜ் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் ரீலிஸ் தேதி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது படத்தை முன்கூட்டியே வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் இப்போது மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் கேரளாவைச் சேர்ந்த ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாக, சவுதி அரேபியாவில் ஒரு ஆட்டு பண்ணையில் அடிமையாக நடித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வந்தது.

இதனால், மலையாள திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘ஆடுஜீவிதம்’ திகழ்கிறது.

இப்படத்தில் அமலா பால், கோகுல், ஜிம்மி ஜீன்-லூயிஸ், தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT