மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.
அவர் இயக்கிய ‘அங்கமாலி டைரிஸ்’, ‘ஈ.மா.வு’ மற்றும் ‘ஜல்லிக்கட்டு’ போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவை.
‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.
இவரது அடுத்த படமாக மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியானது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ரிலீஸுக்குப் பிறகு படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ரிலீஸால் படத்தின் வசூல் ஓரளவு ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இதுவரை பார்க்காதவர்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
