நடிகரும், பாஜக தலைவருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை விமர்சித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் செயலர் மிதார் மொய்தீன் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
2019ல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயவேல், விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்தார். புகார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கு குந்தகம் விளைவித்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504, மிரட்டல் பிரிவு 509, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
எஸ்.வி.சேகர் அபராதத் தொகையை செலுத்தியதையடுத்து, தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அவரது மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டு தண்டனையை நிறுத்தி வைத்தார்.
