Wednesday, October 28, 2026

எஸ்.எஸ்.ராஜமெளலி அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் வில்லனா?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

“பாகுபலி”, “பாகுபலி 2”, “RRR” போன்ற அடுத்தடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைய இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

அதேசமயம், இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமேசான் காடுகளில் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவில் ஹாலிவுட்டை விட மிகவும் பிரமாண்டமாக இந்த படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய தகவலின்படி, இந்த படத்தில் ஒரு வெளிநாட்டு நடிகை நாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவர் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக எஸ்.எஸ்.ராஜமெளலி படங்கள் என்றாலே பான் இந்திய படங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால், இந்த படத்தில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்கள் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருப்பதாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தான் என்பதும், படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், ஹிருத்திக் ரோஷன் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதால், அவர் தென்னிந்திய படத்தில் நடிப்பது, அதுவும் வில்லனாக நடிப்பது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு மகேஷ் பாபுவை விட பல மடங்கு சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT