Wednesday, October 28, 2026

நடிகை அஞ்சலி விவாகரத்தான தயாரிப்பாளரை திருமணம் செய்துகொள்ள போகிறாரா ? ஷாக்கில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இவர் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதைப்போல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

ADVERTISEMENT

ஆனால், அந்த நேரத்தில் சில சர்ச்சைகள் எழுந்ததால் திரையுலகில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்று நடனம் ஆடினார். அதைப்போல், ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம், அந்தத் தயாரிப்பாளர் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது. ஒரு திரைப்பட விழாவில் சந்தித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த தகவலின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போது நடிகை அஞ்சலி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். அவரது திருமணம் பற்றிய தகவல்கள் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT