Wednesday, October 28, 2026

அம்மோவ் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போன எலுமிச்சை பழங்கள் அதுவும் எங்கு தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ரத்தினவேல் முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில், 9 நாட்களும் பூஜை செய்யப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.

ஏலம்:

ADVERTISEMENT

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், பெரம்பலூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

முதல் நாள் எலுமிச்சை பழம்:

முதல் நாள் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை 50,500 ரூபாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்தாஸ்-கனிமொழி தம்பதி ஏலத்தில் எடுத்தனர்.

மொத்த வசூல்:

2 ஆம் நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.26,500க்கும், 3ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.42,100க்கும், 4 ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.19 ஆயிரத்திற்கும், 5ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்திற்கும், 6ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.34 ஆயிரத்திற்கும், 7ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.24,500க்கும், 8ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.13,500க்கும், 9ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்திற்கும் என மொத்தம் சேர்த்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.

பிரசாதம்:

விடிய, விடிய நடைபெற்ற இந்த ஏலத்தில் எலுமிச்சை பழம் எடுத்த தம்பதியினர் ஈரத்துணியுடன் வந்து கோயில் பூசாரியை வணங்கிய பிறகு ஏலம் எடுக்கப்பட்ட எலுமிச்சை பழத்துடன் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.

வழிபாடு:

இதனை மலைக்குன்றின் மீது அமைந்துள்ள ரத்தினவேல் முருகன் கோயில் சன்னதி முன்பு ஏலம் எடுத்த தம்பதியினர் அங்கு அமர்ந்து பிரசாதத்துடன் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டு விட்டு, முருகனிடம் மனமுருகி வழிபாடு நடத்தி விட்டு செல்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT