ராமாயணம் படத்துக்கு ஆஸ்கர் ஜெயித்த இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைகிறார்கள்!
பிரபல இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் படத்துக்கு ஆஸ்கர் விருது வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பவால், சிச்சோரே போன்ற படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி அடுத்ததாக ராமாயணத்தை படமாக்க உள்ளார். இப்படத்தில் நடிகர்கள் யஷ், ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
ஹான்ஸ் ஜிம்மர் இந்திய சினிமாவில் முதன் முறையாக பணியாற்ற உள்ளார். சர்வதேச தரத்தில் ராமாயணம் படத்தினை கொண்டு செல்ல நிதிஷ் திவாரி உழைத்து வருகிறார். ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைவது இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்காக வருட கணக்கில் ஆராய்ச்சி செய்து முன் தயாரிப்பு பணிகளும் பல மாதங்களாக செய்து வருகிறார்கள். ராமாயணம் மிகவும் முக்கியமான படம். அதனால் பொறுப்புடன் எடுக்கவிருக்கிறார்கள். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இதனை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹான்ஸ் ஜிம்மர் யார்?
ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதானவர் ஹான்ஸ் ஜிம்மர். 1980 முதல் இசையமைத்து வருகிறார். 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைதுள்ள இவர் ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார்.
பாண்டஸி படங்களுக்கு இசையமைப்பதில் மிகவும் பிரபலமனாவர் ஹான்ஸ் ஜிம்மர். ப்ளேட் ரன்னர், இண்டர்ஸ்டெல்லர், தி டார்க் நைட், லயன் கிங், குங்ஃபூ பாண்டா, டியூன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து பணியாற்றும் ராமாயணம் படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
