தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும், இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும் வளம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. பலர் இவரை ‘நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா’ என்றும் செல்லமாக அழைப்பதுண்டு. அழகான சிரிப்பால் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகின் பக்கம் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
பெரிய நடிகையாக மாறுவதற்கு முன்னர், ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்து கொள்ள இருந்தார் ராஷ்மிகா. அந்த நடிகர் யார் தெரியுமா?
12 வயது மூத்தவருடன் காதல்:
நடிகை ராஷ்மிகா இப்போது தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தாலும், அவர் அறிமுகமானது கன்னட திரையுலகில்தான். இவர் முதன் முதலாக நடித்திருந்த படத்தின் பெயர் ‘கிரிக் பார்டி’. இந்த காதல் படத்தில் ராஷ்மிகா மந்தனா ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் ஒன்று சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள சில கால ரிலேஷன்ஷிப்பிற்கு பிறகு, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அப்போது ராஷ்மிகாவிற்கு 21 வயது, ரக்ஷித் ஷெட்டிக்கு வயது 34.
நின்று போன நிச்சயதார்த்தம்!
ராஷ்மிகா-ரக்ஷித் ஷெட்டிக்குள் கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் இருந்தாலும், இவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துதான் பின்னர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்தை 2018ஆம் ஆண்டில் நிறுத்தி விட்டார். இதனால் ரக்ஷித் ஷெட்டியின் இதயம் மட்டுமல்ல, ரசிகர்கள் பலரின் இதயமும் சுக்கு நூறாக உடைந்தது. ராஷ்மிகாவின் முடிவை பலர் விமர்சனம் செய்தாலும், ஒரு சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். இது நடந்து தற்போது 6 வருடங்கள் உருண்டோடி விட்டன.
தற்போது ரக்ஷித் ஷெட்டி:
கன்னட திரையுலகில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர், ரக்ஷித் ஷெட்டி. இவர் நடிகர் மட்டுமல்ல ஒரு திறமையான இயக்குநரும் கூட. இவர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘777 சார்லீ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு சிறந்த கன்னட மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.
