Wednesday, October 28, 2026

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரத்னம்” படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரத்னம்” படம் வரும் 26ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்
ஆகவுள்ளது.

தாமிரபரணி, பூஜை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் – ஹரி கூட்டணி
இணைந்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
தேஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் அதிரடி ஆக்ஷன் களத்தில் உருவாகியுள்ளது.

முன்னதாக வெளியான படங்களிலும் அதிரடி ஆக்ஷன் படங்களையே கொடுத்த இந்த கூட்டணி,
“ரத்னம்” படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழுவினர் ப்ரமோஷனில் தீவிரம்:

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நடிகர் விஷால், இயக்குநர் ஹரி உள்ளிட்ட
படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்த ப்ரமோஷன்களை முடுக்கி விட்டுள்ளனர்.

நடிகர் விஷால் பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இதன்போது பயில்வான் ரங்கநாதன் கேட்ட ஒரு கேள்விக்கு கோபத்துடன் விஷால் பதிலளிக்க மறுத்ததையும்
பார்க்க முடிந்தது.

இதேபோல இயக்குநர் ஹரியும் தன்னுடைய படங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.

விக்ரமை பாராட்டிய ஹரி:

இதனிடையே நடிகர் விக்ரம் குறித்த கேள்விக்கு உற்சாகமாக பதிலளித்த ஹரி, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
எப்படியாவது அவார்ட் வாங்கிவிடுவார் என்று பாராட்டு தெரிவித்தார்.

தற்போது நடித்துள்ள “தங்கலான்” படம், முன்னதாக நடித்துள்ள “அந்நியன்”, “ஐ” போன்ற படங்களில்
விக்ரமின் நடிப்பு மிரட்டியதையும் குறிப்பிட்டார்.

தன்னுடைய இயக்கத்தில் விக்ரம் கமர்ஷியலாக நடித்ததை சுட்டிக் காட்டிய ஹரி, அவர் மற்ற இயக்குநர்களின்
இயக்கத்தில் நடிக்கும் படங்களை தான் விரும்பி பார்ப்பேன் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“தங்கலான்” படத்தின் டீசரை பார்த்து இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என்று தான் மிரண்டதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.

“ரத்னம்” படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT