Wednesday, October 28, 2026

கோபி நயினார் “சிலரை மட்டுமே வளர்த்துவிடும் ஹீரோக்கள், ஐட்டம் டான்ஸ் பற்றி தணிக்கை குழு என்ன செய்கிறது?”

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

“அறம்” படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண்ட்ரியாவை வைத்து “மனுஷி” படத்தை இயக்கியுள்ளார் கோபி நயினார். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டி அளித்து வரும் கோபி நயினார், சினிமா, அரசியல், சமூகம் பற்றி பல துணிச்சலான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.

சில முக்கிய கருத்துக்கள்:

ADVERTISEMENT

சிலரை மட்டுமே வளர்த்துவிடும் ஹீரோக்கள்: “நல்ல கதைகள், நல்ல படங்களை பண்ணுகிறவர்களை கண்டுக் கொள்வதை விட சிலரை மட்டுமே சினிமாவில் பெரிய ஹீரோக்கள் வளர்த்து விடுகின்றனர். தங்களுக்கு யார் செட்டாவார்களோ அவர்களுடன் மட்டுமே பயணிக்கும் புத்தி உள்ளது.”
நயன்தாரா, ஆண்ட்ரியா பற்றி: “நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் தான் தன்னை நம்பி படம் கொடுத்துள்ளனர்.”
ஐட்டம் டான்ஸ் பற்றி: “சினிமாவில் அது என்ன சார் ஐட்டம் டான்ஸ். நடிகைகளை ஐட்டம்னு சொல்லலாமா? இதையெல்லாம் தணிக்கை குழு எப்படி அனுமதிக்கிறது என்றே தெரியவில்லை. நடிகைகள் மோசமான உடைகளை அணிந்து கொண்டு சினிமாவில் குத்தாட்டம் போடும் போது என்னுடைய மகளுடன் உட்கார்ந்து அந்த பாடல்களை பார்க்க முடியவில்லை. அதற்கெல்லாம் தணிக்கை குழு எந்த தடையும் சொல்லாது. கருத்துள்ள படங்களுக்கு மட்டும் அதை சொல்லக் கூடாது. இதை சொல்லக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்து பல வெட்டுகளை செய்யும்.”
மனுஷி படம் இந்தியா குறித்தும், இந்தியாவில் சொந்த மக்கள் மீதே ஏவப்படும் அடக்குமுறைகள் குறித்தும் பேசியிருப்பதாக கோபி நயினார் கூறியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT