Wednesday, October 28, 2026

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அபிசித்தர் வெற்றி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் 1200 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். முதல் சுற்றில் சரவணகுமார் மட்டும் இரண்டு காளைகளை அடக்கி அடுத்த சுற்றுக்கு தேர்வாகினார்.

ADVERTISEMENT

இரண்டாவது சுற்றில் 6 காளைகளை அடக்கிய சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

கட்டிக்குளத்தைச் சேர்ந்த சிவசேரன் 4 காளைகளை அடக்கி இரண்டாம் இடமும், வலையங்குளம் பாலமுருகன், இருங்கங்கோட்டை நல்லப்பா ஆகிய இருவரும் 2 காளைகளை அடக்கி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

இந்தப் போட்டியில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் காயமின்றி வெற்றிகரமாக முடிந்ததற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT