Wednesday, October 28, 2026

சைலண்டாக நடந்த அஜித் 63 படத்தின் பூஜை – செம்ம கெத்தாக எண்டரி கொடுத்த அஜித்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்தின் 63வது படமான ஏகே 63 படத்தில் டோலிவுட் பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், ஏகே 63ல் தேவி ஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளார். இதனால் ஏகே 63 தெலுங்கு படமாக உருவாகப் போகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

மைத்ரி மூவி மேக்கர்ஸ், தேவிஸ்ரீ பிரசாத் என டோலிவுட் கூட்டணியுடன் ஏகே 63 படத்தில் இணைந்துள்ளார் அஜித். இதன் காரணமாகவே படமும் தெலுங்கு கலர் டோனில் இருக்குமோ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் தேவிஸ்ரீ பிரசாத், இப்போது அஜித்துடனும் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஏகே 63 படத்தின் பூஜை பொங்கல் தினத்தன்று சென்னையில் நடைபெற்றதாக சொல்லப்பட்டது. சிம்பிளாக நடைபெற்ற இதில் ஏகே 63 படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுபற்றி அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஏகே படத்தின் ஷூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ஏகே 63 படம் எந்த விதத்தில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT