அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் புதிய இடத்திற்கு செல்ல உள்ளது.இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார்.
மேலும், பிரியா பவானி சங்கர், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா என பலர் நடித்து வருகின்றனர். எக்கசக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘விடா முயற்சி’ ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வெளியீட்டுக்கு முன்பே பெரும் தொகைக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்குமார். தற்போது இந்த படத்தை AK63 என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தை இசையமைக்க படக்குழுவினர் அணுகியருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
