Wednesday, October 28, 2026

அஜித் ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய விடாமுயற்சி டீம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்தின் 62வது படமான “விடாமுயற்சி” படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் தொடர்ந்து நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி சில தினங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து அஜித் லண்டனில் புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகள் அனௌஸ்காவின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மீண்டும் அசர்பைஜான் திரும்பினார். ஆனாலும் திட்டமிட்டபடி இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறாமல் தற்போது தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளையொட்டியே அறிவிக்கப்பட்டது விடாமுயற்சி படம். ஆனாலும் வைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக இயக்குநர் மகிழ் திருமேனி போலவே ரசிகர்களும் காத்திருந்தனர். ஒரு வழியாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே63 படத்தின் சூட்டிங்கில் மார்ச் மாதத்தில் அஜித் இணையவுள்ளதால், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.அசர்பைஜானில் விடாமுயற்சி சூட்டிங்கிற்காக சிறிய அளவிலான செட்கள் அமைக்கப்பட்டு வருவதால் சூட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்ற யூனிட் வேலையில்லாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசர்பைஜானில் ஒருநாள் சூட்டிங்கை நடத்தி முடிக்க 50 லட்சம் ரூபாய் செலவாவதாகவும் தற்போது சூட்டிங் நடத்தப்படாமல் உள்ளது மேலும் நஷ்டத்தை எற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை பிப்ரவரியில் நிறைவு செய்துவிட்டு மார்ச் மாதத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள ஏகே63 படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளும் மறுபுறம் ஜரூராக நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்திற்கான அலுவலக அளவிலான பூஜை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய மகிழ் திருமேனி மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு அஜித் அழுத்தம் கொடுத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. படக்குழுவினர் திட்டமிட்டபடி சூட்டிங்கை முடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT