Wednesday, October 28, 2026

அள்ளி அள்ளி கொடுக்கும் தங்கமான மனசு என்றால் அது அஜித் மட்டும் தான்.! பிரபலம் கூறிய உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். அவருக்கு ரசிகர்கள் மன்றம் வேண்டாம் என்று கூறி, ரசிகர்களின் நலனுக்காக அதைக் கலைத்தவர். சமீப காலமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால், உதவி தேவைப்படும் நபர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.

அஜித் இந்த உச்சத்தை அடைவதற்கு யார் உதவியும் நாடாமல், தனது திறமையால் முட்டிமோதி வளர்ந்தவர். அதேபோல், அவர் ஒரு உதவி செய்கிறார் என்றால், அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் யூடியூப் சேனலில் அஜித்தின் ஒரு அற்புதமான உதவியைப் பற்றி பேசியுள்ளார். அதன்படி, அந்த பத்திரிக்கையாளரின் நண்பர் ஒருவர் அஜித்தை பேட்டி காண சென்றுள்ளார். அப்போது, அந்த பத்திரிக்கையாளரின் நண்பரின் முகம் வாடி இருப்பதை அஜித் கவனித்துள்ளார்.

உடனே, அஜித், “உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது என்னன்னு சொல்லுங்க” என்று கேட்டுள்ளார். அந்த பத்திரிக்கையாளர், “அது ஒன்றுமில்லை. நாம பேட்டிக்கு போகலாமா” என்று மழுப்பினார்.

ஆனால், அஜித் விடாமல் கேட்டார். பின்னர், அந்த பத்திரிக்கையாளர், “சில மாதங்களுக்கு முன்பு நான் இரண்டு லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அது வட்டி மேல் வட்டி போட்டு இப்போது வட்டியும் அடைந்ததில்லை. அசலும் அடைந்தபாடு இல்லை” என்று கூறினார்.

உடனே, அஜித், “அந்த பைனான்ஸ் நம்பர் கொடுங்க. நான் பேசுகிறேன்” என்று கூறினார். அந்த பத்திரிக்கையாளர் நம்பர் கொடுத்தார்.

அஜித் அந்த பைனான்சியரிடம் போன் செய்து, “நான் அஜித் பேசுகிறேன். எந்த மாதிரி ஒருத்தர் கிட்ட கடன் கொடுத்தீர்கள்? அவரால் வட்டியும் அசலும் கொடுக்க முடியவில்லை. நான் மாலை ஆபீஸ்ல தான் இருப்பேன். நீங்கள் அந்த வட்டி கணக்கு என்னவோ அதைக் கொண்டு வாங்க. நான் கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டார்.

உடனே, அந்த பத்திரிக்கையாளர் அஜித்தை கட்டிப்பிடித்து அழுதார். அப்போது, அந்த பைனான்சியரும் வந்துவிட்டார். அவர் தனது பணத்தையும் வாங்கிக்கொண்டு அந்த பத்திரிக்கையாளரின் பத்திரத்தை கொடுத்துவிட்டு சென்றார்.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர். “இந்த காலத்தில் யாரோ முகம் தெரியாத பத்திரிக்கையாளர் ஒருவரின் கடனைத் தீர்த்து வைத்த அஜித்தின் மனசு எப்படி இருக்கும்?” என்று பலரும் கூறுகின்றனர்.

அஜித்தின் அள்ளி அள்ளி கொடுக்கும் மனசு, அவரது ரசிகர்களின் அன்புக்கு ஒரு அடையாளம். அவர் எப்போதும் தனது ரசிகர்களின் நலனுக்காக சிந்திக்கிறார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT