அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித் குமார், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு இடைவெளியில் அஜித் மற்றும் ஆரவ் இருவரும் அஜர்பைஜானில் உள்ள பாக்கு நகரில் சுற்றுலா சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில், டிசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து செம யங்காக இருக்கும் அஜித்தின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த சில படங்களில் சற்றே பருமனாக இருந்த அஜித், விடாமுயற்சி படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெளிவாகிறது.



விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 1ம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் படமாக்கப்படுகிறது. ஜாலியாக மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்லும்போது அங்கு அஜித் சந்திக்கும் பிரச்சனைதான் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜூன் எனவும் செய்திகள் கசிந்தது.



அஜர் பைசானின் குளிர் பனி அதிகம். அதேபோல், திடீரென மணல் புயல் உருவாகி விடுமாம். அதோடு, ஒரு நாளைக்கு அங்கு படப்பிடிப்பு நடத்த ரூ.50 லட்சம் வரை செலவாகி வருகிறதாம்.



இவ்வளவு சிரமங்களுக்கு இடையில்தான் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைசானில் உருவாகி வருகிறது.



இந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் படக்குழுவோ, தயாரிப்பு நிறுவனமோ வெளியிடுவதில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பொங்கலுக்கு எதாவது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஒன்றும் வரவில்லை.

இந்நிலையில், விடாமுயற்சி படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாகும் என செய்திகள் கசிந்துள்ளது.


எந்த அப்டேட்டும் இல்லாமல் தவித்து வந்த அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்துள்ளது. எனவே, டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் இந்த தகவலை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இந்த தகவல் உறுதியானதா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த தகவல் உண்மையாக இருந்தால், அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.


