அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் முடிவடைந்த நிலையில், வேகம் பெற்றுள்ளது. அஜீத் குமார் முற்றிலும் சாம்பல் நிறத்தில், நரைத்த முடி மற்றும் தாடியுடன் காணப்பட்டார். விடாமுயற்சியில் இருந்து மேலும் கவர்ச்சிகரமான முன்னேற்றங்கள், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதே வெளியீட்டின் படி, பர்ஸ்ட் லுக்கிற்கான போட்டோஷூட் செய்யப்பட்டுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து விரைவில் விடாமுயற்சி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன. அசுர வேகத்தில் அஜித்: அஜித்தின் ஏகே 62 திரைப்படம் விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு இறுதியில் தொடங்கியது. இதுவரை இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 24ம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜானில் ஆஜராகிவிட்டனர்.


ஏற்கனவே அஜித்தின் காட்சிகளை பாதிக்கும் மேல் ஷூட் செய்துவிட்டாராம் மகிழ் திருமேனி. அதுபோக மிச்சமிருக்கும் அஜித்தின் மொத்த போர்ஷனையும் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என பிளான் செய்யப்பட்டுள்ளதாம். விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து 3 முறை தான் பிரேக் எடுத்துள்ளார் அஜித். அதனால் அவரது காட்சிகளை பெரும்பாலும் முடித்துவிட்டார் மகிழ் திருமேனி. அதேபோல், அஜித் – அர்ஜுன், அஜித் – த்ரிஷா என இந்த காம்போவில் வரும் காட்சிகளும் ஓரளவு முடிந்துவிட்டதாம். இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து முதல் ஆளாக அஜித் தான் வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரிக்குள் அஜித் போர்ஷனும், மார்ச் இறுதிக்குள் விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 63 படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க ஆதிக் ரவிச்சந்திரன் ரெடியாகிவிட்டாராம். அதனால் தான் விடாமுயற்சியில் அஜித்தின் பகுதியை மட்டும் அவசரமாக எடுத்து வருகிறார் மகிழ் திருமேனி. அதன்பின்னர் மற்ற போர்ஷனை ஷூட் செய்துவிட்டு, ஒரே மாதத்தில் எடிட்டிங் உட்ப்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடிக்கவுள்ளாராம். அப்போது தான் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. மே மாதம் கோடை விடுமுறையும் தொடங்கிவிடும் என்பதால், சம்மர் ஸ்பெஷலாக விடாமுயற்சியை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபார்ஸ்ட் லுக், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று, பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படிப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற உள்ளது. அதன்பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெறுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவில் கூறுகிறார்கள். உடனடியாக இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு மே மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.


இந்நிலையில் சிவகார்த்திகேயனை அஜித் போன் மூலம் விடாமுயற்சி படத்தில் ஒரு சாங் நீ எழுதி பாடணும் என்று சிவகார்த்திகேனுக்கு அன்பு கட்டளை போட்டாராம் அஜித் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு சிவகார்த்திகேயன் பிடித்த ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது.


மேற்கூறிய மாற்றங்களைத் தவிர, விடாமுயற்சியின் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மையப் பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் நடன இயக்குனரான உச்ச சவுந்தர், படத்திற்காக சில உயர்-ஆக்டேன் ஆக்ஷன் காட்சிகளை இயற்றியதாகத் தெரிகிறது. மற்ற ஆதாரங்களின்படி, படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரியில் நிறைவடையும், இறுதி தேதி ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியின் படைப்பாளிகள் ஏப்ரல் இறுதியில் வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, அதாவது போஸ்ட் புரொடக்ஷனுக்கு ஒரு மாதம் ஆகும்.
