Wednesday, October 28, 2026

500 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் அஜித் ! ரகசியத்தை உடைத்த முக்கிய பிரபலம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் இணைந்து நடித்த பில்லா, ஆரம்பம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க திட்டமிட்டிருந்தனர். அந்தப் படம் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதை மையமாக வைத்து உருவாகும். அதில் அஜித் ராஜராஜ சோழனாக நடிக்கவிருந்தார்.

ADVERTISEMENT

ஆனால், அந்த நேரத்தில் விஷ்ணுவர்தனுக்கு தமிழைத் தாண்டி பாலிவுட்டில் ஷேர்ஷா என்னும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அஜித் மற்ற படங்களில் பிஸியாக நடித்திருந்ததால், அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது, விஷ்ணுவர்தன் மற்றும் அஜித் இருவரும் அந்தப் படத்தை மீண்டும் எடுக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் வெகு விரைவிலேயே உருவாக வாய்ப்பு இருப்பதாக அந்தணன் கூறியுள்ளார்.

அஜித்தை இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்தப் படம் நடந்தால் அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT