அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் முடிவடைந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத் குமார் நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் முற்றிலும் நரைத்த தோற்றத்துடன் காணப்பட்டார்.
விடாமுயற்சியில் இருந்து இன்னும் சுவாரஸ்யமான புதுப்பிப்புகளில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று விகடனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அதே கட்டுரையில், ஃபர்ஸ்ட் லுக்கிற்கான போட்டோஷூட் முடிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரும் சினிமா ஒரு பக்கம் ரேஸ் ஒரு பக்கம் என இருதலை கொள்ளி எறும்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து இப்போதுதான் சூட்டிங்கும் நடைபெற்று கொண்டு வருகின்றன. அதிலும் தற்போதைய நிலவரப்படி அஜர்பைஜானில் ஏற்பட்ட காலநிலை காரணமாக படப்பிடிப்பை நடத்துவதற்கு வேறொரு இடத்தை தேடிக் கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பிப்ரவரியில் படத்தை முடித்து அஜித் மார்ச் மாதத்தில் இருந்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படத்தை எப்படியும் பிப்ரவரியில் முடிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. அதனால் ஆதிக் படமும் தள்ளி போக வாய்ப்பிருக்கிறது. விடாமுயற்சி படத்தின் ரிலீஸும் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில் ஏப்ரல் மாதத்தில்தான் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறதாம். இதன் காரணமாக இந்தியன் 2, வேட்டையன், தங்கலான் போன்ற படங்களின் ரிலீஸும் தள்ளிப் போகும் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். இதில் ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
இதில் விடாமுயற்சி படக்குழு செய்த ஒரே தவறு படத்தின் டைட்டிலை ஆரம்பத்திலேயே சொன்னதுதான். சொல்லாமல் இருந்திருந்தால் இப்போது அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு இப்பொழுது டைட்டிலை சொல்லி வாயடைத்திருக்கலாம். ஏனெனில் படத்தின் டைட்டிலை தவிற வேறெந்த அப்டேட்டும் கொடுக்கக் கூடாது என அஜித் கூறியிருப்பதாக அந்தனன் கூறினார்.விடாமுயற்சி அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் படம். இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
