அஜித் அஜர்பைஜானில் நடக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் வழக்கமான அப்டேட்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ரேஸி ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படும் இப்படம் அஜித் குமாரின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதைக் குறிக்கிறது. AK தனது சக நடிகர்களுடன் இரவு உணவை உண்டு மகிழ்ந்ததையும், முன்னதாக படப்பிடிப்பில் அவரது குழுவிற்கு புகைப்படக் கலைஞராக மாறியதையும் நாங்கள் பார்த்தோம்.தற்போது, ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் சில ரசிகர்களை நடிகர் சந்தித்துள்ளார். சமீபத்தில் அஜித்குமார் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை வாழ்த்தி அவர்களுடன் மனம் விட்டு பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அவரது அன்பான விருந்தோம்பலை இப்போது சமூக ஊடகங்களில் ஆளும் கிளிப்பில் காணலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதி வரை அஜர்பைஜானில் நடைபெறவுள்ளது.
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், அஜித்தின் ஏகே 64 படத்தில் வெற்றிமாறனுடன் இன்னொரு பிரபலமும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலம்
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வ்ருகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது.
மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் மாஸ் காட்டிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனிடையே அஜித்தின் 64வது படம் குறித்தும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக அஜித் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், அது உண்மை இல்லை என்றும், வாடிவாசல் படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் வாடிவாசல் முடிந்ததும் அஜித்துடன் இணையவுள்ளாராம் வெற்றிமாறன். அஜித்தும் அதற்குள்ளாக ஏகே 63 படத்தை முடித்துவிடுவார் என சொல்லப்படுகிறது. இதனால் அஜித் – வெற்றிமாறன் கூட்டணி இணைவது உறுதி என்றே தெரிகிறது.
இந்தப் படத்தை எல்ரெட் குமார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். வெற்றிமாறனின் விடுதலை படத்தை இதே நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், அஜித் – வெற்றிமாறன் இணையும் ஏகே 64 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார்.ஆனால், அஜித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இதுவரை இணைந்தது கிடையாது. அதனை தீர்த்து வைக்கும் விதமாக அஜித்தின் ஏகே 64 படத்தில் சந்தோஷ் நாராயணன் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் – வெற்றிமாறன் காம்போவை ரசிகர்களே இதுவரை நினைத்துப் பார்த்தது கிடையாது. ஆனால், தற்போது இக்கூட்டணி இணைந்தால் அது தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் ஜானரில் மட்டுமே நடித்து வரும் அஜித், வெற்றிமாறனுடன் இணைந்தால் பழையபடி நடிப்பிலும் அசரடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி 2024 தீபாவளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது, இதன் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவடையும். இதில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பிலும், நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஆகியோரின் DOP படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
