தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனி காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் இருந்து சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசும் வலைப்பேச்சு அந்தனன், “விடாமுயற்சிக்குப் பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு காமெடி படத்தில் நடிக்க உள்ளார். அதன்பிறகு, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சிறுத்தை சிவா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக இருப்பதால், அந்தப் படத்தை முடித்த கையோடு அஜித்துடன் இணைய உள்ளார். அதனால், வெற்றிமாறன் அல்லது பிரசாந்த் நீலின் படங்கள் அஜித்தின் லைன் அப்பில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
