Wednesday, October 28, 2026

ரஜினியின் அனுமதிக்காக காத்திருக்கும் அஜித் ! இது மட்டும் நடந்தால் ! மிரளும் திரையுலகம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பாட்ஷா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் கையில் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1995 ஆம் ஆண்டு பொங்கல் வெளியான பாட்ஷா படம் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு வெளியான அத்தனை மும்பை தாதாக்கள் கதையிலுமே பாட்ஷாவின் சாயல்தான் இருக்கும். அந்த அளவுக்கு பாட்ஷா ஒரு சிறந்த படமாக அமைந்துவிட்டது.

ADVERTISEMENT

பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் ரஜினிகாந்த் எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டாரோ எந்த பிடியும் கொடுக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் பாட்ஷா 2 படத்தில் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

விஷ்ணுவர்தன் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாகவே இருந்தது. அந்த விருப்பத்தை ஏற்று அஜித் இந்தப் படத்தில் நடித்தார்.

இதேபோல் பாட்ஷா 2 படத்திலும் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவர்தன் அஜித்தை சந்தித்து இந்தப் படத்தில் நடிக்குமாறு அழைத்துள்ளார். அஜித் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

அஜித் இந்தப் படத்தில் நடித்தால், பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அஜித் நடித்த படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT