சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழியில் நடந்து, தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
ஆரம்ப காலத்தில் ஊடகங்களில் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்திவிடும் அஜித்துக்கு, ரஜினி பேட்டிகளை தவிர்க்க அறிவுரை வழங்கினார். அதன்பின்னர் அஜித் ஊடகங்களுக்கு பேட்டிகளை தவிர்த்து வருகிறார்.
தோல்வி படத்திற்கு பிறகு அதே தயாரிப்பாளருக்கு ஒரு வெற்றி படம் கொடுத்துவிட்டு செல்வது ரஜினியின் வெற்றி ரகசியம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு தோல்வி படத்திற்கு பிறகு தங்க மகன், மூன்று முகம் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார் ரஜினி.
அஜித்தும் ரஜினியின் இந்த ரகசியத்தை பின்பற்றுகிறார். விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகு அதே சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு விஸ்வாசம் என்ற ஹிட் படத்தை கொடுத்தார் அஜித். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் பூரித்துப் போய் கூறியிருந்தார்.
ரஜினியின் வெற்றி ரகசியத்தை பின்பற்றி தன்னுடைய ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற்று, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நிலைத்து நிற்கிறார் அஜித்.
