அஜித் கோலிவுட்டில் நேற்று முதல் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன. திடீரென வெளியிடப்பட்ட இந்த காட்சிக்கு பின்னால் அஜித்தின் மனக்குமுறல் தான் காரணம் என பிரபல விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அவர் விடாமுயற்சியை கைவிட்டு விட்டார் என்ற பேச்சுகள் எழுந்தன. அதே நேரத்தில் சன் ரைசர்ஸ் அணியின் நடராஜ பிறந்தநாளை கொண்டாடியது நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதனால் அஜித் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாக தான் விடாமுயற்சியின் அந்த குறிப்பிட்ட காட்சி வெளியிடப்பட்டதாம். அஜித் வேகமாக வண்டி ஓட்டி சென்று திடீரென ஏற்பட்ட தடைகளில் 20 அடி பள்ளத்தில் கார் தடம் புரண்டது. அது ஹாமர் கார் என்பதால் அஜித்துக்கும் அவருடன் இருந்த ஆரவிற்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
இப்படி கடின உழைப்பை போட்டு நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் மீது தனக்கு ஆர்வம் இல்லை என ரசிகர்கள் தெரிவிப்பது அஜித்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே மங்காத்தா படத்தில் பைக் விபத்து காட்சியை வெளியிட்டிருந்தனர். இப்படி தொடர்ந்து விபத்து காட்சிகளை வெளியிட்டால் அது அஜித்தின் இமேஜை பாதிக்கும்.
கேரியர் முக்கியம்தான். அதே அளவில் உயிரின் மீதும் கவனம் இருப்பது முக்கியம். அஜித் போன்ற முன்னணி நடிகருக்கு சின்ன விபத்து ஏற்பட்டால் கூட அது ரசிகர்களை பாதிக்கும். இதை அஜித் இனிமேல் கருத்தில் கொண்டு நடந்து கொள்வது அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது என பிஸ்மி கூறியுள்ளார்.
