தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தனது நடிப்பால் மட்டுமல்ல, தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவர் எந்தவிதமான ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று சொல்லி, எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அக்கவுண்டை வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு ஆர்வம் இல்லை.

ஆனாலும் அப்படி இவர் ஒதுங்கி இருந்தாலும் ரசிகர்கள் இவரை விடுவதாக இல்லை. இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். முக்கியமாக இவர் படத்தை அதிக அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.


அஜித் ஒருபோதும் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்று பலமுறை கூறியுள்ளார். ஆனால், சமீப காலமாக அவரது அரசியல் நுழைவு குறித்த பேச்சுகள் எழுந்து வருகின்றன.


இதற்கு முக்கிய காரணம், அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ரங்கராஜ் பாண்டே. இவர் ஒரு முன்னாள் செய்தியாளர், தற்போது யூடியூப் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த படத்தின் போது இருவரும் நெருக்கமாக பழகியதால், அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கின்றனர்.


இவர்கள் இருவரும் அரசியல் குறித்து பேசுவதாக கூறப்படுகிறது. ரங்கராஜ் பாண்டே, அஜித்தை அரசியலில் இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.


>
அஜித்தின் அரசியல் நுழைவு என்பது தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அஜித் விஜய்க்கு போட்டியாக அரசியலில் நுழைந்தால், அது விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக இருக்கும்.


